உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடை இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

நிழற்குடை இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

வள்ளிமலை : வேலுார் மாவட்டம், வள்ளிமலையில், தேரடியை ஒட்டி அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில், வள்ளிமலை, கோட்டநத்தம், மேல்பாடி உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த, 750 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள், வள்ளிமலை, மேல்பாடி, பொன்னை கூட்டு சாலையில் இருந்து பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர். இந்த முச்சந்தியில், நிழற்குடை ஏதும் இல்லை. இதனால், இங்குள்ள காந்தி மண்டபத்தின் படிகளில், மாணவர்கள் காத்திருந்து பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர். மேலும், வள்ளிமலைக்கோவிலுக்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனால், இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் தினசரி பயணிக்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் மிக்க இந்த பகுதியில், நிழற்குடை இல்லாததால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மாணவர்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக, மூன்று சாலைகளின் ஓரத்திலும் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ