உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாஸ்ட் புட் உணவகத்தில் திடீர் தீ விபத்து

பாஸ்ட் புட் உணவகத்தில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர்:திருவள்ளூர் பகுதியில் 'பாஸ்ட் புட்' உணவகம் நேற்று தீயில் எரிந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் சிவி நாயுடு சாலையை சேர்ந்தவர் குமார், 45 . இவர் காமராஜர் சிலை அருகே கிங் பாஸ்ட் புட் உணவகம் நடத்தி வருகிறார்.நேற்று காலை கடையின் மேல் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் கடையில் இருந்த இரண்டு குளிர்சாதனப் பெட்டி மற்றும் மரத்துாள் தீயில் எரிந்து கருகின. தகவலறிந்த திருவள்ளூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. திருவள்ளூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை