உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பின்றி சுதாநகர் நிழற்குடை

பராமரிப்பின்றி சுதாநகர் நிழற்குடை

ஆர்.கே.பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இருந்து, வாலாஜா செல்லும் மாநில நெடுஞ்சாலையில், திருவள்ளூர் மாவட்டம், பீமாரெட்டியூர், செங்கட்டானுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை, சுதாநகர் அருகே, மாநில நெடுஞ்சாலையில் இணைகிறது.இங்கு பயணியரின் வசதிக்காக நிழற்குடையும் கட்டப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இங்கு காத்திருந்து பேருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்த நிழற்குடை, சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சீரழிந்து வருகிறது. நெடுஞ்சாலைக்கும் நிழற்குடைக்கும் இடையே செடிகள் வளர்ந்துள்ளன.இதனால், பயணியர், இந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பகுதிவாசிகளின் நலன் கருதி, இந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !