மேலும் செய்திகள்
மூடிய சர்க்கரை ஆலைகளை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
28-May-2025
திருவள்ளூர், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்துவதில் ஏற்படும் காலதாமதத்தை சரிசெய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க, கலெக்டரிடம் கரும்பு விவசாயிகள் வலியுறுத்தினர்.திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 40 ஆண்டுக்கும் மேலாக திருவாலங்காடில் இயங்கி வருகிறது. இங்கு திருவள்ளூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உட்பட, மாவட்டம் முழுதும் 2,000க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பதிவு செய்து, அரவைக்காக தாங்கள் உற்பத்தி செய்த கரும்பை அனுப்பி வைக்கின்றனர்.இங்குள்ள அரவை இயந்திரம் பழமையாக உள்ளதால், அரவை திறன் குறைந்து வருகிறது. ஆரம்பத்தில், 30 - 35 கோடி கிலோ கரும்பு அரவை செய்யப்பட்ட நிலையில், தற்போது 20 கோடி கிலோவாக குறைந்து விட்டது.இதனால், மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கரும்பு பயிர், தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக கூட்டுறவு சர்க்கரையை ஆலை நவீனப்படுத்த கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்தும், இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த, 168 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நவீன இயந்திரம் பொருத்தி மேம்படுத்த வேண்டும் என, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், கரும்பு விவசாயிகள் வலியுறுத்தினர்.'இதுகுறித்த கோப்பு நிலுவையில் உள்ளதால், அதை உடனடியாக நிறைவேற்ற சர்க்கரை ஆலை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவூட்டப்படும்' என, கலெக்டர் பிரதாப் உறுதியளித்தார்.
28-May-2025