உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மயங்கி விழுந்து துணை நடிகர் பலி

மயங்கி விழுந்து துணை நடிகர் பலி

வெள்ளவேடு:வெள்ளவேடு அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில், இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், 'வேட்டுவம்' என்ற திரைப்பட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், 'அட்டகத்தி' தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். துணை நடிகர்களுடன் நேற்று மதியம் நடந்த படப்பிடிப்பில், சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 58, என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்ட படிப்பிடிப்பு குழுவினர், தண்டலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். வெள்ளவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி