உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வேயர்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வேயர்கள் போராட்டம்

திருத்தணி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு சங்கம் வாயிலாக, நில அளவை களப் பணியாளர்களின், 9 அம்ச கோரிக்கைகள்நிறைவேற்றக்கோரி மூன்று கட்ட போராட்டம் அறிவித்து உள்ளனர். இந்நிலையில், நேற்று, திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில், 10க்கும் மேற்பட்ட சர்வேயர்கள் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில், சிறப்பு திட்டங்கள் வாயிலாக பெறப்படும் மனுக்களின் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல், ஊழியர்கள் மீது பணிச்சுமை ஏற்படுத்துவதை கைவிட வேண்டும்.தரமிறக்கப்பட்ட குறு வட்ட அளவர் பதவியினை பெற்ற தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலைத்திட வேண்டும் உள்ளிட்ட, 9 கோரிக்கைகள் வலியுறுத்தி, ஊழியர்கள் கோஷம் எழுப்பி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் நேற்று நில அளவை பணிகள் பாதிக்கப்பட்டன.வரும் 19ம் தேதி, சர்வேயர்கள் ஒரு நாள் அடையாள தற்செயல் விடுப்பு போராட்டம், அடுத்தாண்டு ஜன.,22ம் தேதி முதல், 23ம் தேதி வரை, 48 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் சர்வேயர்கள் திட்டமிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ