மேலும் செய்திகள்
பாலியல் புகாரில் சிக்கிய 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்
11-Mar-2025
திருவள்ளூர், ஆதார் மைய சேவைகளுக்கு நிர்ணியத்ததை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் பணி நீக்கம் செய்யப்படுவர் என, அரசு கேபிள் டிவி தனி தாசில்தார் எச்சரித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்தைச் சேர்ந்தவர் அன்வர். இவர், தன் ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றுவதற்காக, திருத்தணி தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் மையத்திற்கு, கடந்த மார்ச் மாதம் சென்றார்.அப்போது, அங்கிருந்த ஊழியர் ஒருவர், அவரிடம் இருந்து, 150 ரூபாய் பெற்றார். ஆனால், 100 ரூபாய் மட்டும் பெறப்பட்டதாக அவரது மொபைல் போனிற்கு குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து, அவர் முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் அளித்தார்.இந்த நிலையில், அவரது புகார் மனு குறித்து திருவள்ளூர் மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவன தனி தாசில்தார் மற்றும் துணை மேலாளர் மனுதாரருக்கு அளித்துள்ள பதில் மனு:ஆதார் மையங்களில் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக வசூல் செய்வது தெரியவந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் இவ்வாறான புகார் வராத வகையில் பணிபுரிய எழுத்து பூர்வமான உறுதிமொழியும் பெறப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
11-Mar-2025