உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூங்காவுக்கு ஒதுக்கிய நிலத்தில் சாலை அமைக்க முடியாது தமிழக அரசு தகவல்

பூங்காவுக்கு ஒதுக்கிய நிலத்தில் சாலை அமைக்க முடியாது தமிழக அரசு தகவல்

சென்னை:'பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, சாலை அமைக்க பயன்படுத்த முடியாது' என, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் கிராமத்தில் உள்ள சபரிநகரில், பூங்காவுக்காக இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில், சபரி நகர் மனை பிரிவுக்காக சாலை வசதி அமைத்து தர உத்தரவிடக்கோரி, அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அரசு தரப்பில், மனுதாரர் கோரும் இடம் பொதுமக்களின் வசதிக்காக, பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் என்பதால், சாலை அமைக்க முடியாது என, வட்டார வளர்ச்சி அதிகாரி தெரிவித்துள்ளார்' என, தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக, கலெக்டர் எடுத்த முடிவு மீது, எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை. கலெக்டரின் முடிவு குறித்து, மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.'மனுதாரர் சட்ட பூர்வமாக நிவாரணம் தேடி கொள்ளலாம்' என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !