உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருமழிசை:திருமழிசை டாஸ்மாக் குடோன் முன் நேற்று, டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு., சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான ஊதியத்தை 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும். போனஸ் வழங்கவும், வேலை நேரத்தை முறைப்படுத்த வேண்டுமென்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை