எம்.எல்.ஏ., அலுவலகம் தற்காலிக இடமாற்றம்
திருவள்ளூர்:திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருவள்ளூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், பெரியகுப்பத்தில் உள்ள மேம்பாலம் அருகே செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக தி.மு.க., - ராஜேந்திரன் பதவி வகித்து வருகிறார்.எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர், பல்வேறு பிரச்னை மற்றும் கோரிக்கை குறித்த மனுக்கள் அளிக்க வருகின்றனர்.எம்.எல்.ஏ., இல்லாத நேரத்தில், அலுவலக ஊழியர்கள், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, நிவர்த்தி செய்து வருகின்றனர். தற்போது, எம்.எல்.ஏ., அலுவலகம் பராமரிப்பு பணி காரணமாக, ஜே.என்.சாலை, ஐ.ஆர்.என்., கல்யாண மண்டபம் பின்புறம் உள்ள திருவாசகம் தெருவில், ஒரு வாரம் இயங்கும் என, அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.