உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்கம்பிகள் சீரமைப்பில் புதுடெக்னிக் மரக்கம்பால் முட்டு கொடுத்த வாரியம்

மின்கம்பிகள் சீரமைப்பில் புதுடெக்னிக் மரக்கம்பால் முட்டு கொடுத்த வாரியம்

கடம்பத்துார்:தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், கடம்பத்துார் ஒன்றியத்தில் உளுந்தை ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து, உளுந்தை வழியாக, 2.2 கி.மீ., தூரமுடைய வயலுார் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது. இச்சாலை 2022ம் ஆண்டு நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த நெடுஞ்சாலை, 2023ம் ஆண்டு, 4.50 கோடி ரூபாய் மதிப்பில், 7 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டது. மேலும், மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.இதில், மின்கம்பங்களை மாற்றியமைக்க ஊராட்சி நிர்வாகம் நிதி அளித்தும், சில இடங்களில் மாற்றியமைக்காததால், கம்பங்களுக்கிடையே உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.இந்த மின்கம்பிகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் மரக்கம்பால் முட்டுக் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக, இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். தமிழக முதல்வரின் பண்ணை தோட்டம் அமைந்துள்ள உளுந்தை ஊராட்சியிலேயே மின்கம்பங்கள் சீரமைப்பில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, உளுந்தை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை