உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  குண்டும் குழியுமான சாலை கொத்தியம்பாக்கத்தில் அவதி

 குண்டும் குழியுமான சாலை கொத்தியம்பாக்கத்தில் அவதி

திருமழிசை: நேமம் பேருந்து நிறுத்தத்திலிருந்து கொத்தியம்பாக்கம் செல்லும் சாலைசேதமடைந்துள்ளதால், பகுதி மக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ளவேடு அடுத்த, சித்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தியம்பாக்கம் கிராமத்திற்கு, மேல்மணம்பேடு, சித்துக்காடு வழியாக ஒரு சாலையும், நேமம் பேருந்து நிலையம் அருகே மற்றொரு சாலையும் உள்ளது. இப்பகுதியினர், நேமம் பேருந்து நிலையம் அருகே செல்லும் சாலையையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில், தினமும் ஏராளமான லாரிகள் செங்கல் சூளைகளுக்கு மணல் கொண்டு செல்வதால், சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியேஇருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பகுதி மக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவியர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையோரம் முட்செடிகள் வளர்ந்து உள்ளதால் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க, ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ