உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுகாதார நிலைய கட்டடம் சேதம் காவேரிராஜபுரம் பகுதியினர் அவதி

சுகாதார நிலைய கட்டடம் சேதம் காவேரிராஜபுரம் பகுதியினர் அவதி

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், காவேரிராஜபுரம் கிராமத்தில், 1981ல் துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அங்கு, கர்ப்பிணிகள், குழந்தைகள், பொதுமக்கள் என, 50க்கும் மேற்பட்டோர் தினமும், சிகிச்சைக்காக வந்து சென்றனர்.கடந்த 2019ம் ஆண்டு பெய்த கனமழையால், 40 ஆண்டு பழமைவாய்ந்த, துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கூரையின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தன.இதையடுத்து, இக்கட்டடம் மூடப்பட்டது. அன்று முதல், துணை ஆரம்ப சுகாதார நிலையம், அதே பகுதியில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால் சிகிச்சைக்கு வருவோர், துணை ஆரம்ப சுகாதார நிலையம் எங்குள்ளது என, தெரியாமல் தேடி அலைகின்றனர்.இந்நிலையில் நான்கு ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் கட்டடம் உள்ளதால், மேலும் சேதமடைந்த நிலையில் உள்ளது.எனவே, காவேரிராஜபுரம் துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் அமைக்க, சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காவேரிராஜபுரம் துணை ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்தது. அதை சீரமைக்கும் வாய்ப்பு இல்லை. எனவே இக்கட்டடம் இடித்து அகற்றி, புதிய கட்டடம் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை