உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சகதியான சர்க்கரை ஆலை வளாகம் கரும்பு ஏற்றி வந்த வாகன ஓட்டிகள் அவதி

சகதியான சர்க்கரை ஆலை வளாகம் கரும்பு ஏற்றி வந்த வாகன ஓட்டிகள் அவதி

திருவாலங்காடு:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காடில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் திருத்தணி, அரக்கோணம் உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகின்றன.இந்தாண்டு, 2 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நவம்பர் இறுதியில் அரவை துவங்கியது. தினமும் ஆலைக்கு டிராக்டர் லாரி என 90 வாகனங்களில் கரும்பு அரவை செய்ய கொண்டு வரப்படுகிறது. தற்போது ஆலை வளாக பகுதி மண் தரையாக உள்ளதால், தொடர்ந்து பெய்து வரும் மழையால் சகதியாக காட்சியளிக்கிறது.இது குறித்து, டிராக்டரில் கரும்பு ஏற்றி வந்த திருத்தணியைச் சேர்ந்த ராமச்சந்திரன் கூறியதாவது:ஆலை வளாகத்தில் சகதியாக உள்ளதால், டிராக்டர் சிக்கி கவிழ்ந்து விடும் அபாயம் இருப்பதுடன், சில நேரங்களில் டிராக்டர்கள் பழுதடைகிறது.இதனால் கரும்பு ஏற்றி வரும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். இதனால், ஆலையில் அரவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்னை உள்ளதால் சிமென்ட் தரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ