ஆற்றை கடந்த முதியவர் மாயம்
பாண்டூர்:பூண்டி ஒன்றியம் குப்பத்துபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமைய்யா, 65. இவர் நகரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மாலை பேருந்தில் ராமஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து நடந்து ஈன்றம்பாளையம் கொசஸ்தலையாற்றை கடந்து தன் ஊருக்கு சென்றார்.பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அதை பொருட்படுத்தாமல் ஆற்று வெள்ளத்தை கடந்த போது அடித்து செல்லப்பட்டார்.சம்பவம் குறித்து அப்பகுதிவாசிகள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த கனகம்மாசத்திரம் போலீசார் மற்றும் திருத்தணி தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவரை தேடி வருகின்றனர்.