உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூதாட்டி உடல் தோண்டி எடுத்து எரிப்பு

மூதாட்டி உடல் தோண்டி எடுத்து எரிப்பு

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே கெட்ணமல்லி கிராமத்தில், சரவணா கார்டன் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் ராம்குமார். இவரது தாயார் கனகாமுஜம், 78, ஜூலை 18ம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அங்குள்ள சுடுகாட்டில் வெளிநபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வேறு வழியின்றி சரணவா கார்டனில் உள்ள பூங்காவில் மூதாட்டியின் உடல் புதைக்கப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியிருப்போர் நல சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்து முறையாக சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதன்படி கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரணவகுமாரி முன்னிலையில், பூங்காவில் புதைக்கப்பட்ட மூதாட்டியின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. பின் கும்மிடிப்பூண்டி கோரிமேடு பகுதியில் உள்ள பொது சுடுகாட்டில், தாசில்தார் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.பூங்காவில் புதைக்கப்பட்ட உடல், 111 நாட்கள் கழித்து தோண்டி எடுத்து சுடுகாட்டில் தகனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை