உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படும் ரவுண்டானா

உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படும் ரவுண்டானா

திருவாலங்காடு, திருவாலங்காடு ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இரவில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்டது, அரக்கோணம் ----- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை. இச்சாலை 24 கி.மீ., உடையது. திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து, அரக்கோணம் வரையிலான 9 கி.மீ., சாலை, 68 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பு, கூட்டுச்சாலையாக இருந்தது. இங்கு, வாகன ஓட்டிகள் வசதிக்காக, தற்போது ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால், இரவில் பேருந்துக்காக, பயணியர் அச்சத்துடன் காத்திருக்கின்றனர். இச்சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால், வழி தெரியாமல் வெளியூர் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, திருவாலங்காடு ரவுண்டானாவில் விரைந்து உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !