உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

கடம்பத்துார்,கடம்பத்துார் ஊராட்சி வெண்மனம்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி அல்லி, 52. கடந்த 11ம் தேதி வீட்டின் மாடி படியிலிருந்து தவறி கீழே விழுந்த சகோதரர் மகன் பாலன், 41, என்பவரை அல்லி காப்பாற்ற முயன்றார். இதில், இருவரும் படுகாயமடைந்தனர்.அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பாலன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அல்லி உயிரிழந்தார். இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை