இலுப்பூர் மகளிர் சுகாதார வளாக சுவர் கட்சி விளம்பர மையமாக மாறிய அவலம்
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது இலுப்பூர் ஊராட்சி. இங்கிருந்து பாப்பரம்பாக்கம் செல்லும் சாலையில் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயன்பாட்டிற்காக, 15 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.அதன் பின் அந்த கட்டடம், 10 ஆண்டுகளுக்கு முன், 53,000 ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. அதன்பின், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், கட்டடம் சேதமடைந்து பல ஆண்டுகளாக இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் கட்டடத்தின் உட்புறம் முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் எவவித நடவடிக்கையும் எடுக்காதது பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், தற்போது அரசியல் கட்சியினர் விளம்பர மையமாக, அரசு கட்டடம் மாறியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.