உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரிசி ஆலை முன் நிறுத்திய லாரி மாயம்

அரிசி ஆலை முன் நிறுத்திய லாரி மாயம்

திருத்தணி:திருத்தணி நகரம், எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 54; இவரது அரிசி ஆலை திருத்தணி ஆசிரியர் நகர் பகுதியில் உள்ளது.இந்நிலையில், தெய்வசிகாமணி தன் லாரியை, கடந்த, 15ம் தேதி அரிசி ஆலை முன் நிறுத்தி வைத்திருந்தார்.நேற்று, அதிகாலை 5:30 மணிக்கு தெய்வசிகாமணி ஆலைக்கு சென்று பார்த்த போது, லாரி மாயமானது தெரிய வந்தது. இது குறித்து தெய்வசிகாமணி அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை