உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழையால் ஓட்டு வீட்டின் சுவர் சரிந்தது

மழையால் ஓட்டு வீட்டின் சுவர் சரிந்தது

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன், 50; இவர், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தன் குடும்பத்துடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த கனமழையால் வீட்டின் ஒருபக்க சுவர் விரிசல் அடைந்து காணப்பட்டது. தொடர்ந்து சுவரில் ஈரப்பதம் இருந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் விரிசல் அடைந்த சுவர் சரிந்து வெளிப்பக்கம் விழுந்தது.இதனால் வீட்டில் இருந்தவர்கள் சேதமின்றிதப்பினர். வருவாய் துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு மற்றும் தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி