உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பரிதாப நிலையில் தண்ணீர் பந்தல் பானை இருக்கு... தண்ணீர் எங்கே?

பரிதாப நிலையில் தண்ணீர் பந்தல் பானை இருக்கு... தண்ணீர் எங்கே?

திருவள்ளூர்:கோடைக்காலம் துவங்கியதையடுத்து, மக்களுக்கு பயன்பெறும் வகையில் திருமழிசை, வெள்ளவேடு, மணவாளநகர், கடம்பத்துார், ஸ்ரீபெரும்புதுார் உட்பட பல பகுதிகளில், அரசியல் கட்சியினர் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.இந்த தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு சில நாட்கள் மட்டுமே முறையாக தண்ணீர் வைத்து பராமரிக்கப்பட்டது. அதன்பின், பெரும்பாலான கட்சியினர் தண்ணீர் பந்தலில் முறையாக தண்ணீர் வைப்பதில்லை. இதனால், தண்ணீர் பந்தலுக்கு தாகம் தணிக்க வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, இனிவரும் காலங்களில் தண்ணீர் பந்தலை முறையாக பராமரிக்க, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.� நிழற்குடை அருகே அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இல்லாத பந்தல். இடம்: குண்டுமேடு, திருமழிசை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை