உள்ளூர் செய்திகள்

வாலிபர் மாயம்

திருத்தணி: திருத்தணி பி.எம்.எஸ்., நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி, 64. அ.தி.மு.க., பிரமுகர் மற்றும் முன்னாள் திருத்தணி நகராட்சி துணை தலைவர். இவரது மகன் விஜயகுமார், 30. இவர், கடந்த, 28ம் தேதி தனது பெற்றோரிடம், ரயில் நிலையம் வரை சென்று வருகிறேன் என, கூறிவிட்டு, சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வராததால், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று மாசிலாமணி திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை