உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவிலில் திருட்டு நகை கடையில் திருட முயற்சி

கோவிலில் திருட்டு நகை கடையில் திருட முயற்சி

திருவள்ளூர்: திரு வள்ளூர் மார்க்கெட் பகுதியில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நேற்று காலை கோவிலுக்கு பக்தர்கள் வந்த போ து, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த திருவள்ளூர் நகர போலீசார் விசாரணையில், கோவிலில் உள்ள இரு பி த்தளை குத்து விளக்கு மற்றும் பித்தளை பொருட்கள் மாயமானது தெரிய வந்தது. உண்டியலை உடைக்க முடியாததால் பணம் தப்பியது. அதேபோல், கோவிலுக்கு அருகில் உள்ள 'அசோக் ஜூவல்லர்ஸ்' என்ற நகை கடையிலும் மர்ம நபர்கள் திருட முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, கோவில் நிர்வாகி குமரகுரு அளித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை