ரெட்டம்பேடு சாலையில் முட்செடிகள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பொன்னேரி:குமரஞ்சேரி - ரெட்டம்பேடு சாலையின் ஓரங்களில் வளர்ந்துள்ள முட்செடிகளால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.பொன்னேரி அடுத்த குமரஞ்சேரி கிராமத்தில் இருந்து, ரெட்டம்பேடு செல்லும் சாலையின் ஓரங்களில் முட்செடிகள் வளர்ந்து உள்ளன.அவற்றின் கிளைகள் சாலை வரை நீள்கின்றன. எதிர் எதிரே வாகனங்கள் கடக்கும்போது முட்செடிகளை உரசியபடி செல்லும் நிலை உள்ளது. முட்செடிகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.அவர்கள் கூறியதாவது:குமரஞ்சேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற, முருகன் கோவில் அமைந்து உள்ளது. செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் கும்மிடிப்பூண்டி, ரெட்டம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இந்த சாலை வழியாக கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.முட்செடிகளால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் முட்செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.