மேலும் செய்திகள்
சென்ட்ரலில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்
20-May-2025
திருவாலங்காடு, மே 31---ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரயில் மற்றும் பேருந்துகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக, வடக்கு மண்டல ஐ.ஜி.,க்கு தகவல் கிடைத்தது. அதன்படி, தனிப்படை எஸ்.ஐ., பார்த்திபன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு திருவாலங்காடு ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, ரயில் நிலையத்திலிருந்து வந்த மூன்று இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டனர். அவர்களது உடைமைகளில், 9 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.அவர்களிடம் விசாரித்ததில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முத்துகுமார் 19, நிர்மல்குமார், 26, சூர்யா, 28 என்பது தெரியவந்தது. மேலும், திருவாலங்காடு ரயில் நிலைய சுற்றுவட்டார கிராமங்களில் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்ததுஇதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்து, திருத்தணியில் உள்ள ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
20-May-2025