உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவர்கள் மோதல் மூன்று பேர் கைது

சிறுவர்கள் மோதல் மூன்று பேர் கைது

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை அடுத்த கேசவராஜகுப்பம் கிராமத்தை;r சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சிறுவர்கள் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.கேசவராஜகுப்பத்தைச் சேர்ந்த சிறுவன் நேற்று, பொதட்டூர்பேட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, நகர எல்லையில் ஆறு பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தியது. சிறுவனை தாக்கிய கும்பல், கொலை மிரட்டல் விடுத்தது.இதில், படுகாயம் அடைந்த சிறுவன், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொதட்டூர்பேட்டை போலீசார், பொதட்டூர்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சபரி, 19, என்பவர் உட்பட மூன்று பேரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ