மலைத்தேனீ கொட்டி மூன்று பேர் காயம்
திருத்தணி:திருத்தணி வள்ளி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கொள்ளாபுரி. 58. இவர். நேற்று காலை சாய்பாபா நகரில் உள்ள விவசாய நிலத்தில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மர்ம நபர்கள் சிலர். மரத்தில் இருந்த மலைத்தேனீ கூட்டை கல்லெறிந்து கலைத்து சென்றனர். அப்போது, கொள்ளாபுரி மற்றும் அவ்வழியாகச் சென்ற மேலும் இருவரை தேனீக்கள் கொட்டின. இதில் காயமடைந்த மூன்று பேரும், திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொள்ளாபுரி மட்டும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.