மேலும் செய்திகள்
'கட்சியிலும் மதிப்பில்லையே!'
18-Oct-2025
பொன்னேரி: நிலத்தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி உட்பட மூன்று பேருக்கு, பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 50. இவரது தம்பி சோமசுந்தரம், 49. இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த 2016ல், சோமசுந்தரம் பிரச்னைக்குரிய காலி நிலத்திற்கு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அதை, கோவிந்தசாமி தட்டிக்கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில், சோமசுந்தரம் மற்றும் உறவினர்கள், கோவிந்தசாமியை கத்தியால் தலையில் வெட்டினர். இதில், பலத்த காயமடைந்த கோவிந்தசாமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக, கோவிந்தசாமியின் மனைவி பரமேஸ்வரி, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, சோமசுந்தரம், அண்ணன் சண்முகசுந்தரம், 51, உறவினர்கள் பூபதி, 63, ஆசைதம்பி, 56, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை, பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் சண்முகசுந்தரம் இறந்துவிட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பல்லவன் வாதாடினார். நேற்று நீதிபதி எழிலரசி, சோமசுந்தரம், பூபதி, ஆசைதம்பி ஆகிய மூவருக்கும், தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும், 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
18-Oct-2025