டூ - வீலரில் சென்றவர் கழிவுநீர் லாரி மோதி பலி
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம், தடா பகுதியில் வசித்தவர் மணி, 32. நேற்று காலை, கும்மிடிப்பூண்டியில் இருந்து, ஆந்திரா நோக்கி, 'ஹீரோ ஸ்பிளன்டர்' டூ - வீலரில் சென்றுக் கொண்டிருந்தார்.சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், பெத்திக்குப்பம் இணைப்பு சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கழிவுநீர் டேங்கர் லாரி ஒன்று அவர் மீது மோதியது.இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.