உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டிராக்டர் கவிழ்ந்து உரிமையாளர் பலி

டிராக்டர் கவிழ்ந்து உரிமையாளர் பலி

ஊத்துக்கோட்டை,:வெங்கல் அடுத்த, மேல்செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 35. நேற்று முன்தினம் இவர், தன் நிலத்தை ஏர் உழுது கொண்டு இருந்தார். அப்போது, டிராக்டர் சேற்றில் சிக்கி கொண்டது.இந்த டிராக்டரை மீட்க, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு டிராக்டர் உதவியுடன், மீட்கும் போது, சுரேஷின் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் அவர், டிராக்டரின் கீழ் சிக்கிக் கொண்டு பலத்த காயம் அடைந்தார்.அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ