| ADDED : நவ 20, 2025 03:48 AM
சென்னை: 'சென்னை - கோவை, பெங்களூரு செல்லும் விரைவு ரயில்களுக்கு, திருவள்ளூரில் நிறுத்தம் வே ண்டும்' என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னைக்கு அடுத்து முக்கிய ரயில் நிலையமாக, திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து, தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இந்த வழி த்தடத்தில் தினமும், 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் கடந்து செல்கின்ற ன. ஆனால், பெரும்பாலான விரைவு ரயில்கள் நி ன்று செல்வதில்லை. இதனால், கோவை, பெங்களூருக்கு செல்வோர், சென்ட்ரலுக்கு சென்று ரயிலில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட பயணியர் சங் க நிர்வாகிகள் கூறியதாவது: திருவள்ளூர் ரயில் நிலைய ம் வழியாக செல்லும் 60 விரைவு ரயில்களில், ம ங்களூர் மெயில், ஆலப்புழா , காவேரி , திருப்பதி, மும்பை, மைசூர் உள்ளிட்ட 11 விரைவு ரயில்கள் மட்டும் நின்று செல்கின்றன. இந்த தடத்தில் அதிக பேர் பயணம் செய்யும் கோவை, பெங்களூரு செல்லும் விரைவு ரயில்களுக்காவது நிறுத்தம் வழ ங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.