உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊத்துக்கோட்டையில் டிரான்ஸ்பார்மர் பழுது

ஊத்துக்கோட்டையில் டிரான்ஸ்பார்மர் பழுது

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை துணை மின்நிலையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியிலும் ஒரு மின் டிரான்ஸ்பார்மர் வாயிலாக மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.இங்குள்ள பஜார் பகுதியில் உள்ள மின் டிரான்ஸ்பார்மர் கடந்த ஒரு வாரமாக பழுதடைந்து உள்ளது. இதனால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் முறையாக மின்சாரம் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதுனால் இரவுநேரங்களில் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர்.தற்காலிகமாக மற்ற பகுதிகளில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்வதால், எந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் மாற்றப்படுகிறதோ அந்த பகுதியில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான மின் விநியோகம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ