தார்ப்பாய் மூடாத லாரிகள் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், காவேரி ராஜபுரம் மற்றும் அரக்கோணம் அடுத்த தக்கோலம், முள்வாய் ஆகிய பகுதிகளில், கல் குவாரிகள், கல் அரவை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.இங்கு உடைக்கப்படும் ஜல்லிகள், எம்.சாண்ட் ஆகியவை வீடுகள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு லாரி, டிராக்டர் வாகனங்கள் வாயிலாக எடுத்துச் செல்லப்படுகின்றன.திருவாலங்காடு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் செல்லும் லோடு லாரிகள் தார்ப்பாய் மூடாமல் இயக்கப்படுவதால், மண் மற்றும் எம்.சாண்ட் காற்றில் பறந்து, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கண்ணை பதம் பார்க்கிறது. தவிர, அளவுக்கு அதிகமாக, வாகனங்களில் லோடு ஏற்றப்படுகிறது.கட்டுமான பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.