உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர் விளக்கம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர் விளக்கம்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்விற்கு பின், கலெக்டர் கவிதா கூறியதாவது: 'முரசு' புயல் ஆந்திர மாநிலத்தில் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு 'ஆரஞ்ச் அலார்ட்' விடப்பட்டிருப்பதால், அதிகப்படியான மழையிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை எதிர்நோக்கும் வகையில், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வருவாய், காவல், தீயணைப்பு, மீன்வளம், மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், அரசு துறையினரும் தன்னார்வலர்களும் தயார் நிலையில் உள்ளனர். புயல் பாதிப்புகள் அதிகம் இருக்கும் கடலோர பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ