உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மர்ம காய்ச்சலால் மூச்சு திணறல் இரண்டரை வயது குழந்தை பலி

மர்ம காய்ச்சலால் மூச்சு திணறல் இரண்டரை வயது குழந்தை பலி

திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அல்லிப்பந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 33; கொத்தனார். இவரது மனைவி கீர்த்தனா, 28. இவர்களுக்கு இரண்டரை வயதில் சர்வேஷ் என்ற ஆண் குழந்தையும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளனர்.இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன் கீர்த்தனா, குடும்ப அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு தாய் வீட்டில் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, சர்வேஷுக்கு சளி மற்றும் காய்ச்சல் திடீரென அதிகரித்து, வலிப்பு ஏற்பட்டது.இதையடுத்து, கீர்த்தனா தனது பெற்றோர் உதவியுடன், குழந்தையை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு, நேற்று அதிகாலை மூச்சு திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை