உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 12 யூனிட் மணல் பறிமுதல் இருவர் கைது

12 யூனிட் மணல் பறிமுதல் இருவர் கைது

திருவள்ளூர்:ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக ஆற்று மணல் கடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் திருவள்ளூர் - திருப்பதி நெடுஞ்சாலையில் கைவண்டூர் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக திருவள்ளூர் நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட இரு ரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.அதில் லாரியில் அரசு அனுமதி இல்லாமல் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியில் இருந்த 5, 7 யூனிட் என மொத்தம் 12 யூனிட் ஆற்று மணலை லாரிகளுடன் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 1.5 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் லாரி ஓட்டுனர்களான ஆந்திர மாநிலம் நெல்லுார் பகுதியைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், 40 மற்றும் திருப்பதியைச் சேர்ந்த கோபி, 46 ஆகிய இருவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும் லாரி உரிமையாளரான ஆந்திரமாநிலம் காளஹஸ்தி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை