பெண்ணை தாக்கிய இருவருக்கு வலை
திருத்தணி:திருத்தணி அடுத்த, தாழவேடு காலனியைச் சேர்ந்தவர் டேவிட் மனைவி பூங்கொடி, 26. இவரிடம், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த குமரேசன், 45, என்பவர், கடனாக அரை சவரன் நகை வாங்கி அடகு வைத்துள்ளார்.பல மாதங்கள் ஆகியும் நகையை மீட்டு தராததால், பூங்கொடி, நேற்று முன்தினம், தாழவேடு காலனி வந்து, குமரேசன், அவரது உறவினர் விஜயா, 35, ஆகியோரிடம் நகையை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.இதையடுத்து நடந்த வாக்குவாதத்தில், குமரேசன், விஜயா ஆகியோர், பூங்கொடியை கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பூங்கொடியை, அப்பகுதியினர் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பூங்கொடி அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, குமரேசன், விஜயாவை தேடி வருகின்றனர்.