உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்

திருத்தணி; ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக சென்னை, வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு, சமீப காலமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வாயிலாகபயணியர் போல் சிலர் கஞ்சா கடத்தி வந்தனர்.இதை தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாச பெருமாள் உத்தரவின்படி, தமிழக -ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனை சாவடியில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.நேற்று மாலை திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த ஆந்திர மாநில பேருந்தில் போலீசார் சோதனை செய்தனர். இருவரின் உடைமைகளில் சோதனை செய்தபோது, 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.மேலும் விசாரணையில், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அஜீஸ், 27, திருவொற்றியூரைச் சேர்ந்த தினேஷ், 28, என தெரியவந்தது. இவர்கள், ஒடிசாவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ