மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற இருவர் கைது
15-Sep-2024
மீஞ்சூர்:ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு, சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் செங்குன்றம் மதுவலிக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற புறநகர் ரயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த, இருவரை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த முகமது அன்சிப், 21, அப்டாப், 21, என்பதும், ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த, 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஆறு கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
15-Sep-2024