மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற சகோதரர்கள் கைது
11-Jul-2025
திருத்தணி:இரு சக்கர வாகனத்தில், கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை கடத்தி சென்ற இருவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருத்தணி பகுதியில், அதிக அளவில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார், நேற்று திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நொச்சிலி சாலையில் அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை, தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்ததில், கே.ஜி.கண்டிகை டாஸ்மாக் கடையில் இருந்து, 100 மதுபாட்டில்கள் வாங்கி வந்து, சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிக விலைக்கு விற்பது தெரிந்தது. பின், மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரித்ததில், திருத்தணி அக்கய்யநாயுடு சாலை பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு, 29, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த ரத்தினம், 40, என தெரிந்தது. இருவரையும், போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
11-Jul-2025