உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மப்பேடு அருகே இரு வேறு இடத்தில் அழுகிய நிலையில் இருவர் உடல் மீட்பு

மப்பேடு அருகே இரு வேறு இடத்தில் அழுகிய நிலையில் இருவர் உடல் மீட்பு

மப்பேடு:மப்பேடு அருகே இரு வேறு இடத்தில், அழுகிய நிலையில் இருவர் உடலை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர். மப்பேடு அடுத்துள்ள கொட்டையூர் பகுதியில், ஏரிக்கு வரும் நீர் வரத்துக் கால்வாயில், அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, மட்பேடு போலீசாருக்கு நேற்று மாலை 6:30 மணியளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தண்ணீரில்லாத அந்த கால்வாயிலிருந்து உடலை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்து கிடந்த ஆண் நபருக்கு 30 முதல் 35 வயதிருக்கும். பழுப்பு நிறத்தில் டி - சர்ட்டும், நீல நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தார். இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என, போலீசார் கூறினர். l மப்பேடு அடுத்த குன்னத்துார் பகுதியில், செங்கல்ராஜு என்பவரின் வாழைத்தோட்டத்தில், முதியவர் இறந்து கிடப்பதாக, நேற்று காலை மப்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், முதியவரின் உடலை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர், மப்பேடு சமத்துவபுரத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து, 65, என தெரிந்தது. கூலித்தொழிலாளியான இவருக்கு நீலாவதி, 60, என்ற மனைவியும் மஞ்சு, 28, என்ற மகளும் உள்ளனர். இவர் கடந்த 13ம் தேதி குன்னத்துாரில் உள்ள தன் மகள் வீட்டிற்குச் சென்று, பேரனின் காது குத்து விழாவில் பங்கேற்க சென்றவர் வீடு திரும்பவில்லை. தற்போது இறந்தது தெரிந்தது. இதுகுறித்து, மப்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை