மின்சாரம் பாய்ந்து இரு எருமைகள் பலி
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால், 60.இவருக்கு சொந்தமான இரு எருமை மாடுகள், நேற்று மேய்ச்சலுக்கு சென்று கொண்டிருந்தன. செல்லும் வழியில், சாலையாரம் பழுதான மின் கம்பம் ஒன்றில் இருந்து, மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.மின் கம்பத்தின் கீழ் உள்ள சேற்றை, எருமை மாடுகள் கடந்து சென்ற போது, மின்சாரம் பாய்ந்து, இரு எருமைகளும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தன.பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.