உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்

திருவள்ளூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடக்கிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 ஓட்டுச்சாவடிகளின் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல், வரும் 18ம் தேதி வரை, உரிமை கோரல் மற்றும் மறுப்புரை பெறும் காலமாகவும், ஜன., 19 - பிப்., 10 வரை, விசாரணை மற்றும் சரிபார்ப்பு செய்து, இறுதி வாக்காளர் பட்டியல், 17ம் தேதி வெளியிடப்பட உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பிற மாவட்டங்களிலிருந்து நிரந்தரமாக குடிபெயர்ந்து வந்தவர்கள், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், https://voters.eci.gov.inஎன்ற இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்காக, நாளை, நாளை மறுநாள் மற்றும் ஜன., 3, 4 ஆகிய நாட்களில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி