உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காஸ் கசிந்து தீ விபத்து இரு மூதாட்டிகள் படுகாயம்

காஸ் கசிந்து தீ விபத்து இரு மூதாட்டிகள் படுகாயம்

பொன்னேரி:சமையல் செய்யும்போது, சிலிண்டரில் இருந்து 'காஸ்' கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில், மூதாட்டிகள் இருவர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீஞ்சூர் அடுத்த காட்டூரைச் சேர்ந்தவர் காசியம்மாள், 67. இவர், வீட்டின் அருகே மீன்கடை வைத்துள்ளார். நேற்று காலை, மீன் வியாபாரத்தை கவனித்தபடி, வீட்டில் சமையல் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மீன் வாங்குவதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த லலிதா, 70, என்பவர் காசியம்மாள் கடைக்கு வந்தார். அவருடன் காசியம்மாள் பேசி கொண்டிருந்த போது, வீட்டில் இருந்து காஸ் கசிந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, இருவரும் வீட்டின் உள்ளே சென்றனர். காஸ் வீடு முழுதும் பரவிய நிலையில், திடீரென தீப்பிடித்தது. இதில், இரு மூதாட்டிகளும் சிக்கினர். அவர்களது அலறல் சத்தம்கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, தண்ணீரை ஊாற்றி தீயை அணைத்து, இருவரையும் மீட்டனர். இதில், காசியம்மாள், லலிதா பலத்த தீக்காயமடைந்தனர். அவர்கள், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை