கார் டயர் வெடித்து விபத்து காயங்களுடன் இருவர் தப்பினர்
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.நேற்று, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பூதபாண்டியன், 45, மாடசாமி, 44, ஆகியோர், திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மலைப்பாதை வழியாக 'ஹூண்டாய் ஐ20' காரில் கீழே இறங்கினர். அப்போது, காரின் டயர் திடீரென வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில், காரின் முன்பக்கம் சேதமடைந்தது. காரில் பயணம் செய்த இருவரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து நடந்த போது, எதிரே வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.