மேலும் செய்திகள்
சாலை விபத்தில் மேஸ்திரி பலி
05-Sep-2024
திருத்தணி: திருத்தணி ஒன்றியம் தாடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ், 23. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த நண்பர் பாலாஜி, 21 என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி பஜாருக்கு சென்றனர். அங்கு பணிகளை முடித்து இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, வி.சி.ஆர். கண்டிகை சுடுகாடு அருகே வந்தபோது, எதிரே வந்த கிரேன் வாகனம், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சுபாஷ், பாலாஜி ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
05-Sep-2024