உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பட்டாசு வெடித்ததில் இருவர் படுகாயம்

 பட்டாசு வெடித்ததில் இருவர் படுகாயம்

திருத்தணி: திருத்தணி அருகே, மூதாட்டி இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில், இருவர் படுகாயம் அடைந்தனர். திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராசு, 24. கூலித்தொழிலாளி. இவர், நேற்று அதே கிராமத்தில், மூதாட்டி ஒருவர் இறப்பு நிகழ்வில் பங்கேற்றார். மாலை இறுதி ஊர்வலத்தின் போது, சின்ராசு பட்டாசு வெடித்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கையில் வைத்திருந்த பட்டாசு வெடித்து சிதறியது. இதில், சின்ராசு மற்றும் அருகே இருந்த வினோத் ஆகிய இருவர், படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்த உறவினர்கள் அவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவம னையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சம்பவம் குறித்து, திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி