உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாதசாரி மீது பைக் மோதி விபத்து கட்டட தொழிலாளி உட்பட இருவர் பலி சாலையில் நடந்து சென்றவர் மீது டூ-வீலர் மோதி இருவர் உயிரிழப்பு

பாதசாரி மீது பைக் மோதி விபத்து கட்டட தொழிலாளி உட்பட இருவர் பலி சாலையில் நடந்து சென்றவர் மீது டூ-வீலர் மோதி இருவர் உயிரிழப்பு

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயலைச் சேர்ந்தவர் அழகிரி, 53; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, மீஞ்சூர் - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.திருவெள்ளவாயல் மாதாகோவில் அருகே செல்லும்போது, எதிரே வேகமாக வந்த 'யமஹா ஆர்15' இருசக்கர வாகனம், அழகிரி மீது மோதியதில், அழகிரி மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.இருசக்கர வாகனம் ஓட்டி வந்த மீஞ்சூர் அடுத்த கடப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 28, தலை மற்றும் முகத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.இருசக்கர வாகனத்தின் பின் சீட்டில் அமர்ந்து வந்த, ஆண்டார்மடத்தைச் சேர்ந்த சஞ்சய், 28, என்பவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பலத்த காயங்களுடன் இருந்த அழகிரி, சஞ்சய் ஆகியோரை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், அழகிரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.சஞ்சய், அதே மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தலைகவசம் அணியாமல் பயணித்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !