உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வல்லுாரில் பைக் மீது லாரி மோதல் பள்ளி மாணவர் உட்பட இருவர் பலி

வல்லுாரில் பைக் மீது லாரி மோதல் பள்ளி மாணவர் உட்பட இருவர் பலி

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி, 35; மின்வாரிய ஊழியர். இவரது சகோதரி மகன் விமல், 15. இவர்; அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று காலை, சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஜோதியும், விமலும், 'டிவிஎஸ் டீலக்ஸ்' பைக்கில் பயணித்தனர்.மீஞ்சூர் அடுத்த, வல்லுார் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, எதிரில் வந்த, 'டாடா' லாரி, ஜோதியின் பைக் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விமல், மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.அங்கு விமல் உயிரிழந்தார்.செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விபத்து ஏற்படுத்திய திருவண்ணாமலை மாவட்டம், ஆனநந்தல் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஹரி பிரசாத், 24, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை